Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த – மைத்திரி கூட்டை விமல் வீரவன்ச உறுதிப்படுத்தினார்

gonwansaமகிந்த மைத்திரி கூட்டமைப்பு தோன்றியுள்ளதை மகிந்தவின் அடிமை விமல் வீரவன்ச உறுதிப்படுத்தியுள்ளார். மகிந்த – மைத்திரி கூட்டை உடைப்பதற்கு சர்வதேசம் சதி செய்வதாக இன்று அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். மகிந்த ராஜபக்ச இன்று வேட்பு மனுவில் கையெழுத்திட்ட பின்னர் அவருக்கு மைத்திரி வழங்கிய நியமனம் உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச சில வெளிநாட்டு சக்திகள் உட்புகுந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை உடைக்கமுயற்சிக்கின்றன என்று குற்றம் சுமத்தினார்.
இதில் சில ஊடகங்களும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மைத்திரிபால தொடர்பாக உருவாக்கப்பட்டிருந்த ‘நல்லாட்சி’ விம்பத்தை இன்று அவரை உடைத்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் மாபியா வலயமைப்பை அழிப்பதற்குப் போதிய பலமிருந்தும் மகிந்தவுடன் மைத்திரி கூட்டுச் சேர்ந்ததன் பின்னணியில் வெளி நாட்டுச் சக்திகளின் தலையீடு இருக்கலாம் என்ற சந்தேகங்கள் இலங்கையில் பரவலாக வலுப்பெற்றுள்ளது.

Exit mobile version