இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புதிதாக இணைந்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் வழங்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் மகிந்த ஆதரவாளர்களால் மைத்திரிபால சிரிசேனவின் துணையோடு கைப்பற்றப்பட்ட நிலையில் மகிந்த எதிர்ப்பாளர்கள் ஐ.தே.க உடன் இணைந்து நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணணியை உருவாக்கியுள்ளனர்.
மக்களால் மகிந்த ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு ஆறுமாத கால இடைவெளிக்குள் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.
ஊழல் பெருச்சாளிகளும் இனக்கொலையாளிகளும் போர்க்குற்றவாளிகளும் முழுமையான சுதந்திரத்துடன் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.
மகிந்த புலிகளைக் காரணம் கட்டியே சிங்கள மக்களை அச்சுறுத்தி வாக்குச் சேகரித்து வந்தார். கடந்த ஆறுமாத ரனில் – மைத்திரி கூட்டாச்சி புலிகளை எதிர்கொள்ள மகிந்தவின் அதிகாரம் தேவையற்றது என மக்கள் உணர்ந்துள்ளனர்.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றிக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
தேர்தலில் ஆட்சியமைப்பதற்குப் போதிய ஆசங்களை ஐ.தே.க பெறாவிட்டால் மகிந்த குழுவுடன் உடன்பாட்டிற்கு செல்வதற்கும் தயங்கமாட்டார்கள் என்பதை மைத்திரிபால முன்னுதாரணமாக வழங்கியுள்ளார்.