Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த மூன்றாவது முறையாகத் தேர்தலில் போட்டி: அரச வழக்குரைஞர்களுக்குக் கொலை மிரட்டல்

SRI LANKA-UNREST-TRANSPORT-ECONOMYஇலங்கையின் ஜனாதிபதியாகப் பதவிவகிக்கும் சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் போட்டியிடலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து தான் மூன்றாவது முறையாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்புச் சட்டங்களின் அடிப்படையில் ஒருவர் இரண்டு முறையே ஜனாதிபதியாகப் போட்டியிடலாம் என்ற போதிலும் மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் போட்டியிடலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. சட்டரீதியான சிக்கல்களைப் பயன்படுத்தி மகிந்த குழு இதற்காக உச்ச நீதிமன்றத்தில் தனது நியாயத்தை அரச வழக்கறிஞர்கள் ஊடாகச் சமர்ப்பித்தது. இலங்கை அரசியல் சட்டப்படி, ஆளும் அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்தால் முன்கூட்டியே தேர்தல் நடத்த அதிபருக்கு உரிமை உண்டு. அதன்படி ராஜபக்சேவின் தற்போதைய பதவிக்காலம் நேற்றுமுன்தினத்துடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது.

வன்னிப் படுகொலைகளை நேரடியாகத் தலைமையேற்று நடத்திய இனக்கொலையாளி ராஜபக்ச, தான் தண்டிக்கப்படப் போவதாக சிங்கள மக்களின் அனுதாப வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். ஊவா மாகாணத் தேர்தலில் மகிந்தவின் செல்வாக்குச் சரிந்ததைத் தொடர்ந்து முன்கூட்டியே தேர்தலை நடத்திப் பதவியைக் கையகப்படுத்த மகிந்த தீட்டிய திட்டத்தின் அடிப்படையிலேயே தேர்தல் அறிவிக்கப்படுகிறது.

இதனை நியாயமற்றது என குழுவினுள் விமர்சித்த இரண்டு அரச வழக்குரைஞர்கள் மகிந்த குண்டர்களால் மிரட்டப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version