Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த பாசிசமும் துணைக் குழுக்களும் விடுத்த அச்சுறுத்தல்

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பல்கலைக் கழக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இறுதி எச்சரிக்கை என்ற தலைப்பில் மரண அச்சுறுத்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த எச்சரிக்கை சுவரொட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் பல மாணவர்களை சுட்டுக் கொன்றதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டில் மண்ணில் மாணவர் போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாதிகளுடன், இணைந்து நாசகார வேலைகளில் ஈடுபட்டது பொன்னாடை அணிந்த புலிகளே என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எமது எச்சரிக்கையை மீறி 2006ஆம் ஆண்டில் குணேந்திரன் தலைமையில் யாழ் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த கர்ணன் மற்றும் சந்துரு பரியோவானைச் சேர்ந்த கண்ணன் போன்றோர் எம்மால் தண்டனை வழங்கப்பட்டு நாட்டினை விட்டு வெளியேற்றப்பட்டதை யாரும் மறக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மகிந்த பாசிச அரசிற்கு எதிராக முளைவிடும் சக்திகளை முளையிலேயே அழிக்கும் நோக்குடன் இலங்கை அரசும் அதன் துணை இராணுவக் குழுக்களும் செயலாற்றி வருகின்றன. புலம் பெயர் நாடுகளில் இலங்கையில் போராடுவதற்கான ஜனநாயகத்தை உருவாக்க முனையும் மக்கள் சார் அணிகளைப் பலப்படுத்தும் போராட்டங்களும் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இந்த அச்சுறுத்தல்கள் மீண்டும் கூறுகின்றன.

Exit mobile version