Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த கொலைமுயற்சி : திட்டமிட்ட வதந்தி?

Rajapakseஜனாதிபதியைக் கொலை செய்து அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சி இடம்பெற்றுவருகிறது என்ற பிரச்சாரத்தை தொடர்ந்தும் சில வாரங்களுக்கு முன்னெடுத்துச் செல்லுமாறும் அதுதொடர்பாக மக்களுக்கு அச்சம் ஏற்படும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் மகிந்த ராஜபக்ஷ முன்னணியின் ஊடகத்தொடர்பாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும அவரது ஊடகக் குழுவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அரச தகவல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அமைச்சர் டக்ளஸினால் அழைக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் தினமின ஆசிரியர் மகிந்த அபேசுந்தர, சுயாதீனத் தொலைக்காட்சியின் சுதர்மன் ரதெலியகொட, திவயின பத்திரிகையின் மனோஜ் அபேதீர, லங்காதீப பத்திரிகையின் பிரசன்ன சஞ்சீவ தென்னகோன் உள்ளிட்ட ஊடகவியலாளர் சிலரும் ஊடகத்துறை அமைச்சின் ஆலோசகரான கலாநிதி சரித்த ஹேரத்தும் கலந்துகொண்டனர்.
மேற்குலக நாடுகள் மற்றும் சி.ஐ.ஏ. அமைப்பு போன்றவை சர்வதேசத் தலைவர்களைக் கொலை செய்து மேற்குலகிற்கு சார்பான எதிர்க்கட்சியின் நிர்வாகத்தை ஏற்படுத்திய விதத்தை உதாரணங்களுடன் சில வாரங்களுக்கு பிரச்சாரப்படுத்துமாறு டளஸ் அழகப்பெரும இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியாக விமர்சன ரீதியான தாக்குதல்களை முன்னெடுக்குமாறும் மகிந்த ராஜபக்ஷ முன்னணியின் ஊடகவியலாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version