மகிந்த ஆட்சியின் தொடரும் இனச் சுத்திகரிப்பு : கிளினொச்சியில் அழிவுகளிடையே விகாரை
இனியொரு...
போரில் அழிவுற்ற கட்டிடங்களின் நடுவே புதிய வெள்ளை நிறக் கட்டிடம் ஒன்று தலை நிம்ர்ந்து நிற்பது புலிகளின் முன்னைய தலை நகரான கிளினொச்சிக்குச் செல்லும் பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. பொது சன நடமாற்றம் இல்லாத, இராணுவம் மட்டுமே வாழ்கின்ற கிளினொச்சியில் காணப்படும் பௌத்த விகாரைதான் அது.
முன்னரே இருந்த விகாரை புலிகளால் சேதப்படுத்தப்பட்டிருந்தது எனவும் அதையே மீள்கட்டமைப்புச் செய்ததாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க பிரித்தானிய ரைம்ஸ் சஞ்சிகைக்கு இது குறித்துத் தெரிவித்தார். கார்த்திகேசு சிவத்தம்பி ரைம்ஸ் இற்குத் தெரிவிக்கையில் அவ்வாறான எதுவும் முன்னர் அங்கு காணப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்தார்.
கிளினொச்சியைச் சிங்கள மயமாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை இருக்கலாம் என பல தமிழ் அரசியல்வாதிகள் ரைம்ஸ் இற்குத் தெரிவித்துள்ளனர். தொல் பொருள் திணைக்களத்தைச் சேர்ந்த சரத் திசானாயக்க, இவ்வாறான 60 பௌத்த விகாரைகள் தமிழ்ப் பகுதிகளில் ஏற்கனவே அமைந்திருந்ததாகக் குறிப்பிடுகிறார். ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகக் காணப்பட்ட இவ்வாறான விகாரைகளை ஏன் இப்போது மீளமைப்புச் செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த ஒருவர் உட்பட பலர் கருத்துத் தெரிவித்தனர்.
மகிந்த அரசின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் கலாச்சார ஆக்கிரமிப்பாக நடைபெறும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக ஆர்வலர்கள் போராட முன்வர வேண்டும் என பேரதனைப் பல்கலை கழக விரிவுரையாளர் ஒருவர் இனியொருவிற்குத் தெரிவித்தார்.