மகிந்த அரச நல்லிணக்க அறிக்கையை வரவேற்கும் பன் கீ மூன்
இனியொரு...
இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டதை தாம் வரவேற்பதாக பான்-கீ-மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் நேற்று நடத்திய நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தாக அவரது பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நிரந்த சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பொறுப்புடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பான்-கீ-மூன் எதிர்பார்த்துள்ளார். 30 வருடு போர் காரணமாக இலங்கையின் வடக்கில் பலர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் பான்-கீ-மூன் கூறியுள்ளதாக அவரது பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.