உள்ளூர் பௌத்த பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்த ஆகியன வெளிப்படுத்திய கண்டனங்களைத் தொடர்ந்து இன்று கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிகன் மத குருக்கள் கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஆங்கிலிககன் தலைமை மத குருக்களான குமார இலங்க சிங்க, கொழும்பு பிஷப் துலிப் டீ சிக்கேரா, குருனாகலை விக்க ஜெனரல், கத்தோலிக்க மத குருக்களான மன்னார் ராயப்பு ஜோசப், மட்டக்களப்பு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, யாழ்ப்பாணம் தோமஸ் சவுந்தரனாயகம் ஆகியோர் கையெழுத்திட்ட இந்த அறிக்கை தேர்தல் வன்முறைகளையும் விமர்சித்துள்ளது.
இலங்கையில் சிவில் சமூகங்களும், மக்களமைப்புகளும் ஒருபுறம் அழிக்கப்பட்ட நிலையிலும், மறுபுறத்தில் தன்னார்வ நிறுவனங்களால் உள்வாங்கப்பட்ட நிலையிலும், எஞ்சியுள்ள மத சார் அமைப்புக்களே எதிர்ப்பியக்கங்களின் தீர்மானகரமான சக்திகளாக அமைந்துள்ளன.