
ஜனாதிபதி, நாடாளுமன்றிற்கு இன்று விஜயம் செய்த போது இதனைக் குறிப்பிட்டதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் சகல மாவட்டங்களிலும் முப்படையினர் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாக, பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கில் விடுதலைப் புலிகளைக் சுட்டிக்காட்டியே மக்களை இருளின் விழிம்பிற்குள் வைத்திருந்த பேரினவாத அரசு இன்று ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் மத்தியிலிருந்தான எழுச்சிகளை எதிர்நோக்குகின்றது.
உறுதியான அரசியல் தலைமை அற்றநிலையில் மக்கள் எழுச்சிகளை திசைவழிப்படுத்தும் தலைமையின் அவசியம் பலராலும் உணரப்படுகின்றது.