Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த அரசுடன் புதிய பேரத்திற்காகப் படையெடுக்கும் அமரிக்க அதிகாரிகள்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் இடம்பெறுவதற்கு முன்னர், அமெரிக்கா, மூன்று உயர் அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கின்றது.
நாளையதினம், அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான தூதுவர் Steven Rapp இலங்கை வந்து, எதிர்வரும் 11 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுடன் அவர் பேச்சுக்களை நடத்தவுள்ளார் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியங்களுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக், அமெரிக்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான உதவிசெயலாளர் மரி ஒட்டேரோ ஆகியோர் இலங்கைக்கு வரவுள்ளனர்.
இனப்படுகொலைக்கு ஆதரவாக அமரிக்க செயற்பட்ட 2009ம் ஆண்டில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களைக் காரணம்காட்டி பேரம்பேசிக் கொண்டது. அமரிக்க அதிகாரிகள் இலங்கை அரசோடு புதிய பேரத்தை உறுதிசெய்துவிட்டுத் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியில் அமரிக்க ஆதரவில் இயங்கும் நிறுவனமான ஐக்கிய நாடுகள் நிறுவனம் இலங்கை மீதான் குற்றச்சாட்டுக்கள் குறித்து மூன்று ஆண்டுகள் நடந்து கொண்ட அதெ வழிமுறையைப் பின்பற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் போராட்டஙகளைத் திட்டமிடுவதன் வழியாகவே உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இந்த நாடுகள் மீண்டும் கூறுகின்றன.

Exit mobile version