முப்பது வருடப் போராட்டத்தில் இழப்புக்களைச் சந்தித்த புலம் பெயர் தமிழ்ப் பேசும் மக்கள் இப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்கவில்லை. தென்னிந்தியச் சினிமாக் காரர்களின் குத்தாட்ட நிகழ்வுகளில் தீவிரமாகப் பங்கேற்கும் தமிழ்ப் பேசும் மக்களின் ஒரு பகுதி போக இன்னொரு பகுதியினர், புலி சார் புலம் பெயர் அமைப்புக்களின் களியாட்ட நிகழ்வுகளில் மூழ்கிப்போயுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச பாசிச அரசிற்கு எதிரான போராட்டங்களை களியாட்டங்கள், அறிக்கைகள் ஊடாகத் திசைதிருப்பி அவற்றை மளுங்கடிக்கும் இவ்வமைப்புக்களுக்கும் இலங்கை அரசிற்கும் இடையே இரகசிய ஒப்பந்தங்கள் இருக்கலாம் எனப் பரவலாகச் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
எது எவ்வாறாயினும் மகிந்த பாசிசத்தைப் பலவீனப்படுத்தும் மக்கள் போராட்டங்கள் மழுங்கடிக்கப்படுகின்றன என்ற உண்மை நேற்றைய போராட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது.
மகிந்த அரச பாசிசத்திற்கு எதிரான பதாகைகளோடும் முழக்கங்களோடும் புதிய திசைகள் அமைப்பினர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மக்கள் போராட்டத்திற்கான இயக்கம் மற்றும் புதிய திசைகள் அமைப்பினர் போராட்ட முடிவில் உரை நிக்ழத்தினர். தமிழில் புதிய திசைகள் அமைப்புச் சார்பில் உரை நிக்ழத்திய பாலன், மகிந்த அரசைப் பலவீனப்ப்படுத்தும் மக்கள் போராட்டங்கள் இன்று அவசியமானவை எனக் குறிப்பிட்டார்.