Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்தவை சந்திக்க மறுத்த பிடல் கஸ்ரோ

கியூபாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ரோவைச் சந்திக்க முயன்ற போதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ரோ, உலகில் மதிப்புக்குரிய தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தற்போது ஓய்வில் உள்ள அவர், கியூபாவில் இப்போதும் செல்வாக்குமிக்க ஒருவராகவே இருந்து வருகிறார்.

இவரைச் சந்தித்துப் பேச ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,வெளிவிவகார அமைச்சின் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால் அவரது கியூப பயணத்தின் போது பிடெல் காஸ்ரோவை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

கியூபா சென்ற பல வெளிநாட்டுத் தலைவர்களை பிடெல் காஸ்ரோ சந்தித்த போதும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அவர் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், கியூபாவின் தற்போதைய அதிபரும், பிடெல் காஸ்ரோவின் சகோதரருமான ரவுல் காஸ்ரோ, துணை அதிபர் மரினோ முரிலோ ஜோர்ஜ் ஆகியோரை மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேசியிருந்தார்.

Exit mobile version