இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் சிறப்பு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அங்கிருந்து அலரி மாளிகைக்குச் சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து பங்கேற்றார்.
இதன்போது பொங்கல் பானையில் அரிசியிட்ட எஸ்.எம்.கிருஸ்ணா அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்வுகளையும் கண்டு ரசித்தார்.
அதன் பின்னர் அவர் சிறிலங்கா அதிபருடன் பேச்சுக்களை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.