Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்தவுடன் இந்தியா பயணமாகும் டக்ளஸ் : கைதுசெய்ய நடவடிக்கை?

நாளை பசில் ராஜபக்சேவிற்குப் பதிலாக இந்தியா செல்லும் ஈ.பி.டி.பி என்ற அரச துணைக்குழுவின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவிற்கு தமிழ் நாட்டில் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளன. இலங்கையில் ஆட்சிக்குவந்த அரசுகள் அனைத்தினதும் துணைக்குழுவாகச் செயலாற்றிய டக்ளஸ் முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் இருக்கும் போது  சூளைமேட்டில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.
தமிழ்நாடு சூழமேடு பகுதியில் கொள்ளை மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக அப்பகுதி நீதிமன்றத்தினால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கண்ட இடத்தில் கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்த பிடியாணை இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்தியாவின் நீதி நிர்வாக எல்லைக்குள் அவர் எங்கிருந்தாலும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அந்த பிடியாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே நாளை இந்தியாவுக்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவை புதுடில்லியில் வைத்து கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.

இந்த பிடியாணை பற்றிய அறிவித்தலை நீதிமன்றத்தில் பார்வைக்கு வைக்குமாறு சட்டத்தரணி ஒருவர் நீதிமன்ற பதிவாளரை கேட்டுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் தமிழகத்தில் உள்ள பிரபல சட்டத்தரணிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது.

Exit mobile version