Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்தவிற்கு மக்கள் ஆதரவும் பொருளாதார நெருக்கடியும்

இலங்கையர்களில் 10 இல் 9 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையை ஆதரிப்பதாக கோல்அப் நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போரின் பின்னர் இலங்கையின் அரைவாசிப் பங்கினர் நிதி மற்றும் உணவு, இருப்பிடம் என்பவற்றில் பாரிய பற்றாக்குறையை எதிர்நோக்குவதாக சர்வதேச சமூக பொருளாதார ஆய்வு நிறுவனமான ‘கோல்அப்’ தெரிவித்துள்ளது
முன்னெப்போதும் இல்லாதவகையில் 2011 ஆம் ஆண்டு காலப்பபகுதியில் 53 வீதமானோர் இந்த பற்றாக்குறைகளுக்கு ஆளாகியிருந்ததாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
போதிய நிதி மற்றும் இருப்பிடம் உணவு என்பவற்றை பெறுவதில் இவர்கள் கஸ்டங்களை எதிர்நோக்கியதாகவும் கோல்அப் குறிப்பிட்டுள்ளது.
எனினும் தமது வாழ்க்கை தரம் உயரும் என்ற நம்பிக்கையை இலங்கையர்கள் கொண்டிருந்ததாகவும் கோல்அப் நிறுவன ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலைமை ஆப்கானிஸ்தானில் நிலைமையுடன் ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச பேரினவாதத்தைநெருக்கடிகளுக்கு மாற்றான கருவியாகப் பயன்படுத்துவதே ஆதரவிற்கான அடிப்படை என்பதைப் புரிந்து கொள்வதும் பேரினவாதத்தை உரமூட்டும் அனைத்து அரசியல் செயற்பாடுகளுக்கு எதிரான பொதுத் தளத்தை உருவாக்குவதுமே இலங்கைப் பாசிச அரசை எதிர்கொள்வதற்கான வழிமுறையாகலாம்.

Exit mobile version