இன்று பிற்பகல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் குடிமக்கள் குரலுக்கான மேடை எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 2010 ஜனாதிபதித் தேர்தலும் இலங்கையின் எதிர்காலமும் என்ற தொனிப்பொருளின் கீழான மாநாட்டின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இம்மாநாட்டில் உரை நிகழ்த்திய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது கட்சியின் அரசியல் செயற்பாடுகளின் விளைவுகளை இப்போதே எமது மக்கள் கண்டு வருவதாகவும் இதன் பிரதிபலனாகவே 13வது திருத்தச்சட்டத்தை செயற்படுத்துவதும் அதனை செழுமைப்படுத்துவதும் மற்றும் தாமதிக்காது வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடாத்துவதும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நிலைப்பாடு இன்று அவரது மஹி;ந்த சிந்தனை கொள்கைப் பிரகடனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது வெற்றி இன்று உறுதிப்படுத்தப்பட்டு விட்டது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது வெற்றியில் பாரிய பங்களிப்பை செலுத்துவார்கள் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேற்படி மாநாட்டில் விஞ்ஞான தொழில்நுட்பத்துறை அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா புளொட் தலைவர் சித்தார்த்தன் ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் ஸ்ரீதரன் மற்றும் மோகன் ஆகியோர் உரைநிகழ்த்தியதுடன் ரங்கன் தேவராஜன் அவர்கள் இம் மாநாட்டிற்கு தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை தமிழ் மக்களை தேர்தலைப் பகிஸ்கரிக்க முடியாமல் அரச துணைக்குழுக்களின் மிரட்டல் அமைந்திருக்கும் என பிரித்தானியாவைச் சேர்ந்த மற்றொரு சட்டத்தரணியான கணநாதன் புதிய திசைகள் உரையாடலின் போது தெரிவித்தார்.