நாட்டிலிருந்து தப்பியதாகக் கருதப்பட்ட மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச தங்காலைப் போலிஸ் நிலையத்தில் திடீரெனக் காட்சி தந்ததாக போலிஸ் ஊடகம் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். இலங்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் இளைமையிலேயே சூறையாட ஆரம்பித்தவர்களுள் நாமல் ராஜபக்ச ஒருவர்.
எதிர்காலத்தில் வாரிசு ஜனாதிபதியாக்க மகிந்தவின் கனவுகளில் உலாவியவர். இன்று தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தங்காலை போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அரசியலிலிருந்து விலகிவிடுமாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறுகிறார். அவரது பாணியில் அவரையே மிரட்டியுள்ளார்கள்.என்கிறார். இதற்கு முன்னர் நாமல் சீனாவிற்குச் சென்றுவிட்டதாக ஊடகங்களில் வதந்தி உலாவிற்று.