Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்தவின் கொலை மிரட்டலுக்கு உள்ளாகும் வெலியமுன

தன்னார்வ நிறுவனமான Transparency International of Sri Lanka இலங்கையின் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகவும் ராஜபச அரசின் ஊழல் முறைகேடுகள் குறித்தும் பல அறிக்கைகளை விடுத்திருந்தது. சர்வதேச நிறுவனமான இந்த அமைப்பின் இலங்கைக் கிளையின் தலைவரான ஜே.சி.வெலியமுன ( J.C. Weliamuna) மகிந்த அரசால் பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளார். மகிந்த அரசின் அடுத்த குறியாக இவர் அமையலாம் என பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங்கள் இனியொருவிற்குத் தெரிவித்தன. இவருக்கு எதிரான ஊழல் குற்றச் சாட்டுக்களை கடந்தவாரம் சட்டவல்லுனர்களின் ஒன்றுகூடலில் மகிந்த ராஜபக்சவே முன்வைத்ததாகவும், இவர் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அங்கு தெரிவித்ததாகவும் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார். பாக்கியசோதி சரவணமுத்து, ஜே.சி.வெலியமுன போன்றோர் இலங்கையில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பிரதானமான இருவர் எனத் தெரியவருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பனிப்போரில் மேற்கின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தும் பிரதிநிதிகளாக தன்னார்வ நிறுவனங்கள் செயற்படுகின்றன.
ஒரு புறத்தில் இந்திய நலன்களும் மறுபுறத்தில் மேற்கின் நலன்களும் மோதிக்கொண்ட மக்கள் விரோதக் களமே ஜனாதிபதித் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version