2008 ஆம் ஆண்டு 9ம் திகதி ஓகஸ்ட் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலிலிருந்து தப்பிய மைத்திரிபால சேனாநாயக்க அவ்வேளையில் விவசாய அமைச்சராகப் மகிந்த அரசைல் பதவி வகித்தார். பொரலஸ்கமுகவில் நடைபெற்ற இக் குண்டுத் தாக்குதலில் தற்கொலைக் குண்டுதாரி மரணித்ததுடன் சிலர் படுகாயமடைந்தனர். தாக்குதலின் பின்னர் கருத்து வெளியிட்ட சிறிசேன புலிகளையும் பிரிவினை வாதத்தையும் கூண்ட்டோடு அழிப்பேன் எனச் சபதமிட்டார்.
போர் நிறைவடைந்ததும் வன்னியில் விவசாய அபிவிருத்தி என்ற தலையங்கத்தில் இராணுவக் குடியேற்றங்கள நடத்த முன்நின்ற்வர்களில் மைத்திரிபால சிறிசேன.
ஹம்பாந்தோட்டையில் செல்வாக்கு மிக்க ரவுடியாகத் திகழ்ந்த மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக, பொலநறுவை அரசியல் குண்டர்படையைத் தலைமைதாங்கும் மத்திரிபால சேனநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டில் மைத்திரிபால சேனாநாயக்கவின் ஒரே மகனும் அவருடன் இணைந்த 13 குண்டர்களும் பொலநறுவை மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரியின் மகனைத் தாக்கியமை தொடர்பாகக் கைதான போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்தார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற நீண்ட ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக முச்சுக்கூட விடவில்லை. அதே மாநாட்டில் பேசிய சந்திரிக்கா குமாரணதுங்க, நாட்டில் ஒரு பகுதி மக்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பது குறித்து எந்தக் கருத்தும் வெளியிடவில்லை. மாறாக புலிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றிய சரத் பொன்சேகாவை மகிந்த சிறையிலடைத்தார் எனத் துயரடைந்தார்.
வறுமையும் பட்டினியும் நாளாந்த வாழ்க்கையாகிவிட்ட சிங்கள உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் சிறுபான்மத் தேசிய இனங்களும் மகிந்த பாசிச அரசிற்கு எதிரான வெறுப்புணர்வைக் கொண்டிருப்பதால் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
அதே வேளை புலிகள் இன்னும் முழுமையாக அழிக்கப்படாத சூழலில் எதிரணியால் நாட்டைப் பாதுகாக்க முடியாது என்ற பிரச்சாரம் ஏற்கனவே மகிந்த ஆதரவுக் கும்பல்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
வெற்று உணர்ச்சிகள் ஊடாகப் புலிகளின் அடையாளத்தைப் புலம்பெயர் நாடுகளில் பேணும் பலர் மகிந்த அரசுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புகளைப் பேணி வருகின்றனர். நேரடியான நிதி முதலீடுகள், தமது முகவர்கள் ஊடான தொடர்புகள், பல்தேசிய வியாபர நிறுவனங்கள் ஊடான தலையீடுகள் போன்றவற்றால் மகிந்த அரசுடனன தொடர்புகள் பேணப்படுகின்றன.
புலிகள் வாழ்வதாகவும், மீண்டும் தமிழீழம் பிடிக்கத் தயார் என்றும் இவர்கள் எழுப்பும் வெற்று முழக்கங்கள் ராஜபக்ச அரசின் இருப்பிற்குப் பயன்படுகிறது.
புலம்பெயர் நாடுகளில் அரசியல் வியாபாரத்திற்கு இந்த அடையாளங்கள் பயன்படுவதால் அரசியல் தலைமைகள் அவற்றைச் சமரசம் செய்து விட்டுக்கொடுக்க மாட்டார்கள். மேலும் குறைந்தபட்ச அரசியல் வேலைத் திட்டம் இல்லாத இவர்களின் ஒரே மூலதனம் புலி அடையாளம் மட்டுமே.
சுய திருப்தி,சுய அடையாளம், வியாபாரம், புகழ் போன்ற அனைத்தும் கலந்த நச்சுப் பதார்த்தமான புலம்பெயர் தலைமைகள் புலம்பெயர் நாடுகளில் புரட்சிகரமான சூழல் ஏற்படாமல் தடுப்பது போன்று இலங்கையில் ராஜபக்சவிற்கும் துணை செல்கின்றன.
இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் ராஜபக்ச பாசிஸ்டுக்கள், புலிகளின் பேரால் இராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு அவற்றிலிருந்து இலங்கையைப் பாதுகாக்க தாம் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்கள். தேவையேற்பட்டால் ஆங்காங்கு சில இராணுவத் தாக்குதல்களை நடத்திவிட்டு புலிகள் மீள்வதாகப் பிரச்சாரம் மேற்கொள்வார்கள். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மகிந்தவின் ஆதரவுத் தளம் மேர்லும் விரிவடையும்.
இதற்கும் மேல் யாருக்குத் தமிழர்கள் வாக்களிக்கலாம் என்ற தடல்புடலான விவாதங்கள் இணைய அரசியல் தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.
தேர்தலால் எந்த மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை. புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் வாழ்கின்ற உணர்ச்சி வியாபாரிகள் இலங்கையில் மக்களை அணிதிரட்டிப் போராட முடியாது என்பதால் தேர்தலை நடத்துவது, மேல் தட்டு அரசியல் வாதிகளைச் சந்தப்பது போன்றவையே அவர்களால் முடிந்தது. ஆக, இவ்வாறான விடையங்களில் மூக்கை நுளைத்து ரிமோட் போராட்டம் செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
இலங்கையில் ஒடுக்குமுறைக்குள் வாழ்பவர்கள் குறுகிய அடையாளங்களுக்காகவும் உணர்ச்சிகளுக்காகவும் தம்மை அரசு படைகளிடம் அடையாளப்படுத்தாமல் மக்களை அணிதிரட்டும் நோக்கோடு இணைந்துகொள்ளவேண்டும். தேர்தல் காலத்தில் கிடைக்கும் குறைந்தபட்ச ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி போராட்டங்களைத் திட்டமிட வேண்டும். அழிவுகளை மட்டுப்படுத்துவதும், அமைப்பைதாலுமே இன்றைய உடனடித் தேவை. தேர்தல் அல்ல.