Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அபாயகரமானது!: சமாஜவாதிக் கட்சித் தலைவர்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அபாயகரமானது என சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்கள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நுழைவதைத் தடுக்க தற்போதைய மகளிர் மசோதா சதிசெய்வதாக முலாயம் குற்றம்சாட்டினார்.

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு சமாஜவாதிக் கட்சி எதிரானது அல்ல, எனினும் அந்த மசோதாவை தற்போதைய வடிவிலேயே நிறைவேற்றுவதைத்தான் எதிர்க்கிறோம் என்றார் அவர். இவ்விவகாரத்தில் காங்கிரஸும், பாஜகவும் சதிசெய்வதாக அவர் கூறினார்.

இது குற்றச்சாட்டு அல்ல. காங்கிரஸ், பாஜக ஆகியவை முஸ்லீம், தலித், பிற்பட்டவர்களுக்கு எப்போதும் எதிரானவை என்பதுதான் உண்மை என்றார் அவர்.

Exit mobile version