இதுவரை மக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முஸ்லீம்களோ அன்றி மாவொயிஸ்டுக்களோ தான் பொறுப்பு என்று காங்கிரஸ் உட்பட அதிகாரவர்க்கத்தின் கண்மூடித்தனமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இந்து பயங்கரவாதம் குறித்த ஆதராங்களை இந்திய ஆளும்வர்க்கம் திட்டமிட்டே புறக்கணித்து வந்தது.
காவி பயங்கரவாதத்தைப் பரப்புவதற்காக பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே குற்றம்சாற்றியுள்ளார்.
சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணையில், வலதுசாரி காவித் தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கிறது என்று ஷிண்டே தெரிவித்தார்.
இக்கருத்துக்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் ஷிண்டே கூறுகையில், காவி பயங்கரவாதம் பற்றி நான் கூறியது ஒன்றும் புதிய செய்தி அல்ல. ஏற்கெனவே ஊடகங்களில் பலமுறை வெளிவந்த தகவல் தான் என்றார்.
ஆதாரங்கள் இருந்தும் இதுவரை யாருக் கைதாகாத நிலை இந்திய அரசின் தோல்வியைக் காட்டுகின்றது.