பௌத்த மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக பிக்குகள் எடுத்து வரும் முயற்சி பாராட்டுக்குரியது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.காலணித்துவ ஆட்சிக் காலத்தில் பௌத்த மக்களின் உரிமைகளை பறிக்க முயற்சி எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனினும், குறித்த காலப் பகுதியில் பௌத்த மக்களின் உரிமைகளை உறுதி செய்ய பௌத்த பிக்குகள் பாரியளவில் சேவையாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகளுக்கு இடையிலான ஒற்றுமை நாட்டின் சுபீட்சத்திற்கு வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சியாம், ராமன்ய மற்றும் அமரபுர போன்ற பிரிவுகளைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.