Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பௌத்த தேசியக் கொடியுடன் தலித்துக்களை அவமதித்த புலியெதிர்ப்புக் குழுக்கள்!

dalitவன்னிப் படுகொலையின் பின்னர் புலியெதிர்ப்பு அரசியல் குழுக்களின் பிரசன்னமும் குற்றவுணர்வும் உச்சத்தை அடைந்துள்ளது என்றே சொல்லவேண்டும். இவர்களைப் பொறுத்தவரை மக்கள் சாரிசாரியாகச் சாகடிக்கப்படுகின்ற போதெல்லாம் வராத உணர்சி சில குறிப்பான சந்தர்பங்களில் மட்டும் பீறிட்டுப் பாயும். யாழ்பாணத்தில் மீளக் குடியேற்றப்படும் முஸ்லீம் தமிழர்களுக்கு ஆதரவாக, புலியெதிர்ப்பு அரச எடுபிடிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கர்த்தாக்களுமாக 70 பேர் சேர்ந்து கையெழுத்துப் போராட்டம் ஒன்றையே நடத்தினார்கள். இதே தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்கள் பௌத்தத்தின் பேரால் பொதுபல சேனா போன்ற அரச சார்பு பயங்கரவாதக் குழுக்களால் தாக்கப்பட்ட போதும், முஸ்லீம்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்ட போதும் இப் புலியெதிர்ப்புக் குழுக்கள் முகத்திலே கரி பூசிக்கொண்டு காணாமல் போனார்கள்.

இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஒடுக்கு முறையின் அடையாளமாகத் திகழும், இலங்கை பௌத்ததின் கொடி பின்னணியில் தெரிய இதே முகங்கள் கடந்தவாரம் மறுபடி பிரசன்னமாகின. இலங்கை பௌத்தம் என்பது ஒடுக்குமுறைக் கருவியாக மாற்றமடைந்த காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட இக் கொடி இன்று பொதுபல சேனா போன்ற பயங்கரவாத அமைப்புக்களின் கைகளில் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு  எதிரான போர்க்கொடியாகப் பயன்படுகிறது.

அனகாரிக்க தர்மபாலவின் காலத்தில் எழுச்சிபெற்ற ஒடுக்குமுறைச் சின்னமான இந்தக் கொடியுடன் இம்முறை இவர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி தலித் தொடர்பானது.

இந்தியா முழுவதும் தலித் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆயுதப்படைகளின் அங்கிக்கரத்துடனும் அனுமதியுடனுமே இச் செயல்கள் அங்கு நடைபெறுகின்றன.

இவற்றைக் கண்டிப்பதும் போராடுவதும் தவறானதன்று. இன்று அவசியமானதே. இப் போராட்டங்களைத் தலித் என்ற குறுகிய அடையாளத்திற்குள் புலியெதிர்ப்புடன் கலந்த சாம்பாராக இலங்கை அரச சார்பு நிலையில் முன்னெடுப்பது பாதிக்கப்பட்ட தலித் பெண்களை அவமதிப்பதாகும். தவிர, தலித் ஒடுக்குமுறை குறித்துப் பேசிக்கொண்டு இலங்கை பௌத்தத்தின் தேசியக் கொடியை உயர்த்திப் பிடிப்பது அதைவிட அவமானகரமானதாகும்.

இப் போராட்டத்தில் கலந்துகொண்ட இலங்கையர்கள் அல்லாதவர்களைத் தவறாக வழி நடத்த இக் கொடி விவகாரம் பயன்படுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version