Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போலிஸ் சந்தேகத்தின் பேரில் கொலைசெய்யலாம் : ஜுரிகள்

Mark-duggan2011 ஆம் ஆண்டு வரலாறு காணாத இளைஞர்களின் எழுச்சியையும் வன்முறையையும் ஏற்படுவதற்கு மார்க் டகன் என்பவரது படுகொலை காரணமாக அமைந்தது. நிராயுதபாணியக டக்சி ஒன்றில் பயணம் செய்த மார்க் டகனை போலிசார் சுட்டுக் கொலைசெய்தனர். கறுப்பின பிரித்தானியரான இவரின் கொலை இளைஞர்கள் மத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல கட்டடங்கள் எரிக்கப்பட்டன. கடைகள், வர்த்தக நிலையங்கள் கொள்ளையிடப்பட்டன. இன்று இவரைக் கொலைசெத போலிசார் குற்றமற்றவர்கள் என ஜூரிகளின் முடிவு கூறுகிறது. கொலை சட்டரீதியானது என்கின்றனர். மார்க் ஆயுதங்கள் எதனையும் கொண்டு செல்லவில்லை எனினும் அவர் ஆயுதங்களை வைத்திருந்தார் எனப் போலிசார் நம்பியது உண்மையானதே என்பதால் அவர்கள் குற்றமற்றவர்கள் என ஜூரிகள் குழு முடிவு செய்தது.
போலிஸ் படை ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் கொலைசெய்யலாம் என்ற இந்த முடிவிற்கு எதிராக பலர் கருத்து வெளியிட்டனர். இவ்வாறான தீர்ப்புக்கள் இலங்கை வெளிப்படையான கிரிமினல் அரசுகள் ஆட்சிசெய்யும் நாடுகளிலேயே நடைபெறுகின்றன. பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில் அறிமுகப்படுத்திய ஒட்டு ஜனநாயகத்தின் கோரமுகத்தை இப்போது பிரித்தானிய மக்களும் அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version