Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர் தொடங்கியதிலிருந்து 25,000 இராணுவத்தினர் தப்பியோடியுள்ளனர்:”ராவய”.

06.11.2008.

இராணுவத்திலிருந்து பெருமளவானோர் தப்பியோடுவதனால் படையினர் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக “ராவய’ பத்திரிகையில் வெளியான முக்கிய பகுதிகள் வருமாறு;

2006 ஆம் ஆண்டு வரை இராணுவத்திலிருந்து 9,500 பேர் தப்பியோடியுள்ளனர். ஆனால், ஆய்வு செய்யப்பட்ட அறிக்கைகளின் படி போர் தொடங்கியதிலிருந்து 25,000 படையினர் தப்பியோடியுள்ளனர். அவர்கள் பின்னர் அதிகாரபூர்வமாக விலக அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது இராணுவத்திலிருந்து தப்பியோடுவோர் அண்மையில் படைகளில் இணைந்தவர்களாவார்.

2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 15,000 பேர் தப்பியோடியுள்ளனர். இது கணிசமான தொகையாகும். இராணுவத்திலிருந்து அதிகளவானோர் தப்பியோடி வருவதனால் முன்னரங்குகளில் பணியாற்றும் படையினர் அதிகாரிகளால் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றனர்.

படையினரின் பகுதிகளிலிருந்து செல்லும் பஸ்களும் கடுமையான சோதனைகளுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. படைத்தரப்பைச் சேர்ந்தவர்களின் தோற்றத்துடன் காணப்படுவோர் தனியாக அழைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வன்னிக்களமுனைகளிலிருந்து 700 க்கும் அதிகமான இராணுவத்தினர் தப்பியோடியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் சரணடைவதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி வரை பொது மன்னிப்புக்காலம் வழங்கப்பட்டுள்ளதும் தெரிந்ததே.

 

Exit mobile version