Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க் குற்றங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும்

இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் போர்க் குற்றங்கள் விசாரணை செய்யப்பட சர்வதேச விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என ஐ.நா செயலாளர் பன் கீ மூன் தெரிவித்துள்ளார்.

05/06/2009 அன்று மூடிய கதவுகளுக்குள் நடைபெற்ற பாதுகாப்புச் சபையின் அமர்வில், சர்வதேச சமூகம் மற்றும் இலங்கை அரசு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அங்கு சமூகமளித்திருந்த ஐ.நா அலுவலர்கள் மற்றும் இராஜ தந்திரிகளின் கருத்துப்படி எவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவிக்கவில்லை எனினும், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பான குற்றச் சாட்டுக்கள் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Exit mobile version