Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க்குற்ற வழக்கில் கைதான நேபாள கேணல் : கம்யூனிஸ்ட் கட்சி பிரித்தானிய அரசிற்குக் கண்டனம்

நேபாள இராணுவத்தைச் சேர்ந்த கேணல். குமார் லாமா என்பவரை பிரித்தானியாவில் தனது குடும்பத்தவரை சந்திக்கச் சென்ற வேளையில் போர்க்குற்றம் சுமத்தி கைது செய்தது. கடந்தவாரம் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அறிக்கை வெளியிட்டுள்ளது.

சூடானில் அமைதி காக்கும் படையில் பணியாற்றும் கேணல். லாமா விடுமுறையில் பிரித்தானியாவிற்கு சென்றிருந்தார். கேணல். லாமாவின் கைதை தமது நாட்டின் இறமையில் பிரித்தானிய அரசு தலையிட்டதாகக் கருதுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. கேணல். லாமா எதாவது காரணத்திற்காகக் குற்றமிழைத்திருந்தால் அதனை விசாரணை செய்வதும் தண்டிப்பதும் நேபாள அரசின் கடமையே தவிர பிரித்தானிய அரசிற்கு தலையிடுவதற்கு எந்த உரிமையும் கிடையாது என கட்சியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமார் லாமாவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கட்சி பிரித்தானிய அரசைக் கோரியுள்ளது.

முடியாட்சிக்கு எதிராகவும் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும் வெற்றிகரமாக ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டத்தைத் தலைமை தாங்கி ஆட்சியைக் கைப்பற்றிய நேபாள அரசியல் தலைமை இன்று புரட்சியை சோசலிசத்தை நோக்கி நகர்த்துவதற்காக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற கட்சியை தோற்றுவித்துப் போராடிவருகின்றது.
குமார் லாமா கைதானதை மகிழ்ச்சியான செய்தியாக வெளியிட்ட தமிழ் இணையங்கள், ராஜபக்சவும் இவ்வாறு கைதாவார் என ஆரூடம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version