Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க்குற்ற அறிக்கை குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது:நிராகரிக்கும் ஹக்

blair-paபிரித்தானியாவின் 250 பக்க போர்க்குற அறிக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்கிறது. படுகொலைகள், பாலியல் வன்முறைகள், கொடிய சித்திரவதைகள் போன்ற பல்வேறு போர்குறங்களை பிரித்தானிய அரசியல்வாதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அறிக்கை ஆதரங்களுடன் முன்வைக்கிறது. நிறுவனமயமான போர்க்குற்றங்கள் என்ற அடிப்படையில் பிரித்தானியாவின் முக்கிட அரசியல் வாதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என இன்டிப்பெண்டன் நாழிதழ் தேரிவித்துள்ளது. 2003 இற்கும் 2008 இற்கும் இடைப்பட்ட காலத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட ஈராக் மக்களுக்கு எதிராக ஒழுங்குபடுத்தப்பட்ட போர்க்குறங்களுக்குப் பொறுப்பானவர்கள் என்ற அடிப்படையில் முன்னை நாள் பாதுகாப்பு அமைச்சர் அடம் இன்கிராம், பாதுகாப்புச் செயலாளர் ஜீயோப் ஹூன் ஆகியோரும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
பொதுநல வழக்கறிஞர்கள் குழு, அரசியல்மைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மையம் ஆகியன நான்கு வருட ஆய்வுகளின் பின்னர் தயாரித்த அறிக்கையே சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட்டது.
இதுகுறித்து பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் குறிப்பிடும் போது பிரித்தானிய அரசு குற்றங்களில் ஈடுபட்டதாகக் கருதப்படும் இராணுவத்தினரை ஏற்கனவே தண்டித்ததாகவும் சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version