Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க்குற்றவாளிகளாக, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் : மலேசிய முன்னாள பிரதமர்

tunmahathirஇலங்கையில் அப்பாவித்தமிழர்களை கொன்று குவித்த அரசியற்தலைவர்களை போர்க்குற்றவாளிகளாக, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மலேசிய முன்னாள பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
பயங்கரவதாதத்திற்கு எதிரான போரை முன்னெடுப்பதாக கூறி, அமெரிக்க படைகள் ஈராக்கின் மீது படையெடுத்த போது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகிருந்தனர். ஆப்கானிஸ்த்தானில் 50,000 த்திற்கு மேற்பட்டோர் பலியாகியிருந்தனர். இந்தப்படுகொலைகளை போலவே, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்களுக்கு காரணமானவர்களும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என மகாதீர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை விடுதலைப்புலிகளை அழிக்க போவதாக கூறி, அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்து, ஈவிரக்கமற்ற மனித வேட்டையை நடாத்திய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது சகாக்கள், மற்றும் இராணுவத்தளபதி சரத் பொன்சேக ஆகியோரினை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து, சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என மலேசியாவின் பிரபல அரசியல் வாதி டத்தோ சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version