ஸ்ரிபன் ராப் இன் ஐந்து நாள் போர்க்குற்ற விசாரணையின் போது நேரடிச் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அந்த பின்னணியில் அமெரிக்க அரசாங்கம் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகள் மூலம் உண்மையை அடைவதற்கு இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையப் போர்க்குற்றமாகக் குறுகலாக்கும் அமரிக்காவும் அதன் ஆதரவாளர்கள் இலங்கை திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலையை அந்த நாட்டையே விசாரணை செய்யக் கோரியுள்ளன.
இவற்றைத் திரிபுபடுத்திச் செய்திவெளியிடும் புலம்பெயர் வியாபார ஊடகங்கள் அமெரிக்கா இலங்கையைப் போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்போவதாகக் பிரச்சரம் செய்கின்றன.
இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்குமான சுபீட்சம் மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் விரும்புகிறது என அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.