Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க்கால குற்றங்கள்: நிபந்தனையுடன் கூடிய பிணை.

போர்க்கால குற்றங்கள் தொடர்பான வழக்கை எதிர்கொண்டுள்ள கோங்கோ ஜனநாயக குடியரசின் முன்னாள் துணை அதிபர் ஜீன்- பியர்ரே பெம்பாவை நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்குமாறு ஹேகிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஜீன் பியர்ரே பெம்பா, காங்கோவின் மிகப் பிரபலமான பெரும்புள்ளிகளில் ஒருவரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர்கொண்டுள்ள காங்கோவின் முன்னாள் இராணுவ அதிகாரமிக்க நபர்கள் நால்வரில் முக்கியமானவருமாவார்.

பெரும்புகழ்பெற்ற செல்வந்தர் ஒருவரின் வாரிசான ஜீன்-பியர்ரே பெம்பா, முன்னாள் கொடுங்கோல் ஆட்சியாளர் மொபுட்டு செசேய் செக்கோவின் உதவியாளராக திகழ்ந்தார்.

விமானங்கள் மற்றும், வானொலிக் கருவிகள் இவ்வாறே தொலைக்காட்சி சேவை நிலையங்களுடன் தொடர்புடைய வர்த்தகங்களில் ஈடுபட்டதன் மூலம் சம்பாதித்த பல நூறு மில்லியன் டொலர்கள் செல்வத்தின் மூலம் காங்கோவின் பணக்காரர்கள் வரிசையில் ஒருவராக இடம்பிடித்தார்.

நீண்டகாலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது காங்கோவின் விடுதலைக்கான இயக்கம் என்ற உகண்டாவின் ஆதரவுடனான ஆயுதப் படையை வழிநடத்தினார்.

இந்த யுத்தத்தின்போது மத்திய ஆபிரிக்க குடியரசிலிருந்த பொதுமக்களை துன்புறுத்தி பாலியல் வல்லுறவு போன்ற கொடுமைகளை போராயுதமாக பயன்படுத்தியதாக இவரது படைமீது குற்றஞ்சாட்டப்பட்டது.

எனினும், சமாதான உடன்படிக்கையொன்றையடுத்து இவர் 2003ம் ஆண்டில் துணை அதிபாராகவும் பதவியேற்றார்.

ஆனால் மூன்று வருடங்களின் பின்னர் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் ஜோசப் கபிலாவிடம் ஆட்சியை இழந்த ஜீன்-பியர்ரே பெம்பா தற்போது ஐந்து வகையான போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கோங்கோவின் அதிபராக பதவியேற்கக்கூடியயவாராக உள்ள ஒருவர் அங்கு பேர் போன குற்றவாளியாக மாறிவிடலாம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

Exit mobile version