Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போருக்கு உரமூட்டிய அலோக் பிரசாரத் மீண்டும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்?

 

விடுதலைப் புலிகளுக்கெதிரான போரின் போது இந்தியாவின் உதவிகளை இலங்கைக்குப் பெற்றுக்கொடுப்பதில் பெரும் பங்காற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாரத்தை, இரண்டு மாத காலத்திற்குள் இந்தியாவிற்கு அழைப்பதற்கு இந்திய வெளிவிகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் பதவிக் காலம் முடிவடைந்த பின்னர், அலோக் பிரசாரத் தற்போது மலேசியாவில் இந்திய உயர்ஸ்தானராக பணியாற்றிவருகின்றார். இந்த நிலையில், அவரை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகராக பணியமர்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
  அலோக் பிரசாத் இலங்கையில் பணியாற்றிய காலப்பகுதியே விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் தீர்மானமிக்க காலமாக அமைந்திருந்தது. போரின் இறுதிக் கட்டத்தின் போது, பொதுமக்கள் செறிவாக இருந்த பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு இந்தியத் தலைவர்களின் அனுமதியைப் பெற்றுக்கொடுப்பதிலும் அலோக் பிரசாத் பங்காற்றியதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.
அத்துடன், அலோக் பிரசாத், இந்திய உயர்ஸ்தானிகராக பணியமர்த்தப்பட்டதன் பின்னரே, இந்திய – இலங்கைக்கிடையிலான தூதரகத் தொடர்புகள் வலுப்படுத்தப்பட்டன. பிரபல கெமி~ன் வரத்தகர் திரு நடேசன் என்பவரே இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் மற்றும் பசில் ராஜபக்~ ஆகியோருக்கிடையே தொடர்புகளை வலுப்படுத்த முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்சவின் கணவரான திரு நடேசன், பசில் ராஜபக்ச மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் ஆகியோரை பிரதி வார இறுதி நாட்களில் வீட்டிற்கு அழைத்து விருந்துபசாரங்களை நடத்தியுள்ளார்.

அக்காலத்தில் இலங்கை அரசாங்க விரோதப் போக்குடையவர் எனக் கூறப்பட்டுவந்த இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் மாணிக்கத்தை, பசில் ராஜபக்ச வின் கைக்குள் போட்டுக் கொள்வதற்கும் திரு நடேசனே வழிசெய்துள்ளார்.

ஆலோக் – பசில் – நடேசன் ஆகியோருக்கு கைக்குள் போடமுடியாது, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் ஒரே நபர் பிரபா மூர்த்தியாவார். அவர் இந்திய  றோ|வின் ஒற்றர் என தொடர்ந்தும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தமை நினைவுட்டத்தக்கது.

Exit mobile version