இரசாயன ஆயுதங்கள், மனிதப் பேரழிவு ஆயுதங்கள் போன்றவற்றைப் பிரயோகித்து உலக மனிதக் கூட்டத்தின் ஒரு பகுதியைச் சாட்சியின்றிக் கொன்றொழித்த இலங்கை அரசு முதல் தடவையாக பொது மக்களும் அழிக்கப்பட்டனர் என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளது.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டு கோத்தாபய ராஜபக்சவினால், நேற்று வெளியிடப்பட்ட மனிதாபிமானப் போரின் உண்மைசார்ந்த பகுப்பாய்வுகள் என்ற 161 பக்க அறிக்கையிலேயே இவ்வாறு பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளது.
அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பாக மனிதாபிமான நடவடிக்கை உண்மை பகுப்பாய்வு என்ற பெயரில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில்,
இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான்.
விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற கடுமையான சண்டையின்போது, பொதுமக்களின் இறப்பு தவிர்க்க முடியாததாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளத.
இழப்புக்கள் குறித்து எந்தக் குறிப்பான தகவல்களும் வெளியிடப்படவில்லை.