இலங்கையில் நேரடியாகத் தலையிடும் நோக்கத்துடன் விடுதலைஅமரிக்க அழுதங்களால் விடுதலை செய்யப்பட்ட சரத் பொன்சேகா மகிந்த ராஜபக்சவிற்கு இணையான குற்றவாளி.
மேலும் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும் என்று முன்னாள் ராணுவத் தலைமை தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் கடந்த திங்கட்கிழமை சிறையில் இருந்து விடுதலையான இலங்கை இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியான சரத் பொன்சேகா செய்தி சானல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மீது சுமத்தப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை எதுவும் வந்தால் இலங்கை அதற்கு நிச்சயம் ஒத்துழைக்க வேண்டும்.
இலங்கையில் போர் நடத்தப்பட்ட விதம் தொடர்பில் இலங்கையின் தலைவர்கள் சிலர் தமது முகத்தை மூடிக்கொள்கிறார்கள். அவர்கள் அப்படி நடந்து கொள்வது எதையோ மறைக்க முற்படுகிறார்கள் என்ற எண்ணம் மற்றவருக்கு தோன்றக் காரணமாக இருக்கிறது.