Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போராட்டம் தொடரும்: சந்தோஸ்

lycasanthusலைக்கா நிறுவனத்தின் ஆதரவில் ஜீ.ரி.வி நடத்திய இசை வேளை என்ற தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளின் களியாட்ட விழாவில் பறை- சுதந்திரத்தின் குரல் 26.07.2014 நடத்திய போராட்டம் தொடர்பாக அமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஸ் தனது தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஈழத் தமிழர்களதும், அவர்களின் புலம்பெயர் பகுதிகளதும் வாழ்வோடு ஒன்றாத, கனவுலகத்துள் மூழ்கடித்து அவர்களின் சமூக உணர்வை மழுங்கடிக்கும் தென்னிந்தியச் சினிமா மற்றும் தொலைக்காட்சிகள் தொடர்பாக ஆரம்பிக்கும் காணொளி லைக்கா என்ற பல்தேசிய நிறுவனத்தின் செயற்பாடுகளை அம்பலப்படுத்துகிறது. பிரித்தானியா போன்ற நாடுகளில் பல்தேசிய நிறுவனங்கள் சட்டப்படி உதவி நிறுவனங்களை உருவாக்க வேண்டும், அது அவர்களின் பொறுப்பு என்று சட்டங்கள் கூறுகின்றன. அதன் உள் நோக்கம் மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து அவர்களை கையேந்தும் நிலைக்குத் தள்ளுவதாகும்.

மறுபுறத்தில் இந்த கோப்ரட் வியாபார நிறுவனங்கள் தமது பணக் கொள்ளையைத் தங்குதடையின்றி நடத்துகின்றன. மக்களின் நாளாந்த வாழ்வில் பிற்போக்கான மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களைப் பிந்தங்கிய நிலைக்கு அழைத்துச் செல்கின்றன. இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழர்களை அமிழ்த்தி அவர்களின் அடையாளங்களைச் சிதைக்கினன என்பதைக் கூற முற்படும் சந்தோஸ் அதனை மேலும் தெளிவாகக் கூறியிருக்கலாம். லைக்கா போன்ற நிறுவனங்களின் நோக்கம் தமிழ்- சிங்கள ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதல்ல. தமிழ் சிங்கள அதிகாரவர்க்கங்களிடையே இணைப்பை ஏற்படுத்துவதே. அதனூடாக மக்களைச் ஒட்டச் சுரண்டுவதே. சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்துடனான அருவருப்பான வியாபாரத்தின் ஊடாக இலங்கை மக்களின் வரிப்பணத்தை லைக்கா சுருட்டிக்கொண்டது இதற்குச் சிறந்த உதாரணம். சந்தூஸின் காணொளியில் தென்னிந்திய சினிமாக் கலாச்சார சீரழிப்பிற்கு எதிரான போராட்டம் தொடரும் என்பதை உறுதியுடன் கூறுகிறார். சுய நிர்ணய உரிமைக்காகப் போராடும் தமிழ் மக்கள் தமது வாழ்வியல் அவலங்களைக் கலைப்படைப்புக்களாக வெளிக்க்கொண்டு வருவது அவசியமானது.

Exit mobile version