Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போராட்டத்தைத் தடுப்பதற்காக கோத்தா நடத்திய கொலைவெறித் தாக்குதல்

ccv2இன்று 10.10.2014 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஜெயக்குமாரியினதும், ஏனைய அரசியல் கைதிகளினதும் விடுதலையை வலியுறுத்தியும், சட்டத்துக்கு முரணான கைதுகள், தடுத்து வைத்தல்களை கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு நடத்தவுள்ள நிலையில் பிரஜைகள் குழுத் தலைவர் மீது இனம் தெரியாத நால்வர் கொலைவெறித் தாக்குதல் ஒன்றை நடத்தினர் என்பது தெரிந்ததே. வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் முன்னால் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டம் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான குறியீடாக அமையும் எனக் கருதியதால் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.

நெடுங்குளம் இராணுவ முகாமிற்கும் பொலிஸ் நிலையத்திற்கும் அருகாமையில் நடைபெற்ற இத் தாக்குதல் அரசபடைகளின் ஆதரவின்றி நடைபெற்றிருக்காது. ஜெயக்குமாரியைக் கைது செய்து தடுப்பு முகாமில் விசாரணையின்றி சிறைப்பிடித்திருக்கும் இலங்கை அரசு அவரது குழந்தையையும் தனிமைப்படுத்தியுள்ளது.
இராணுவ முகாமிற்கு அருகாமையில் நடைபெற்ற இத்தாக்குதலின் பின்புலத்தில் பாதுகாப்பு அமைச்சும் அதன் செயலாளர் இனக்கொலையாளி கோத்தாபய ராஜபக்சவின் கரங்கள் காணப்படுவதாக பல்வேறு தகவல்கள் தெரிவித்துள்ளன.

போராட்டத்தில் மக்கள் கலந்துகொள்ளவில்லையானால் அது பிரதேசச் சபைத் தலைவரைத் தனிமைப்படுத்தி அரசிற்குக் காட்டிக்கொடுப்பது போன்றதாகும்.

Exit mobile version