புளும்பெர்க், ஜூலை 13-
உலக இளைஞர்கள் விழா கொண்டாட்டத்திற் காக 16வது போப் பென டிக்ட் ஆஸ்திரேலியா வந் தார். போப் வந்த விமானம் ஆஸ்திரேலியாவில் வடக்கு எல்லைப் பகுதியான டார் வினில் இறங்கியது. அங்கு எரிபொருள் நிரப்பிக் கொண்ட அந்த விமானம் சிட்னி அருகே உள்ள விமானப் படை விமானத்தளத்திற்கு சென்றது. அங்கு அவரை ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் வரவேற்றதாக ஆஸ்திரேலிய டிவிக்கள் தகவல் வெளியானது.
ஆஸ்திரேலியாவில் 5 நாள் நடைபெறும் உலக இளைஞர் தினவிழாவில் உலகம் முழுவதிலுமிருந்து வரும் 1 லட்சத்து 25 ஆயிரம் கிறிஸ்தவ இளைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். நிறைவு நாளான 20ம்தேதி யன்று பொதுக்கூட்டம் நடக்கி றது. இதில் 5 லட்சம் பேர் கலந்து கொள்கிறார் கள். 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம் பிக்கிற்கு வந்த மக்கள் கூட்டத்தை விட, உலக இளை ஞர் தினவிழாவுக்கு கூடுதல் மக்கள் வருவார்கள் என நிகழ்ச்சி அமைப்பு நிர்வாகி கள் தெரிவித்தனர்.
உலக இளைஞர் தின விழாவுக்கு வருகை தந் துள்ள போப் மத போதகர் கள் மேற்கொண்ட பாலியல் வன்முறைக்கு மன்னிப்பு கோருகிறார். இந்நிகழ்ச்சி யில் சுற்றுச் சூழல் விவகாரம் குறித்தும் போப் பேசுகிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் மதபோதகர் ஜார்ஜ்பால் அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் 20 ஆண்டு கள் முன்னர் தவறுதலாக நடந்து கொண்டார். இதனை கடந்த வாரம் ஜார்ஜ் பெல் ஒப்புக் கொண் டார். மதபோதகர்களின் இத்தகைய செயல்களுக்கு போப் பெனக்டிக் மன்னிப்பு கோர உள்ளார் என தெரி விக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக ஆஸ் திரேலியாவிற்கு வருகை தரும் போப் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களிடம் மன் னிப்பு கேட்பார். ஆஸ்தி ரேலியாவில் குடியேறிய கத்தோலிக்க கிறிஸ்தவர் களும், மத அமைப்புகளும் பழங்குடியினர்களிடையே நடத்திய வன்முறைகளுக் கும் ஒடுக்குதலுக்கும், நிற வெறிச் செயல்களுக்கும் போப் மன்னிப்பு கேட்கிறார்.