Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போபால் மக்களை அம்மணமாக்கி விட்டது இந்திய ஆளும் வர்க்கங்கள்.

1984 – ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய மீத்தைல் ஐசோசயனேட் விஷ வாயு தாக்கி 20,000 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிரந்தரமான் ஊனம அடைந்தவர்கள். என இந்தியாவே பதறி ஆண்டுகள் 26 ஓடிக் கழிந்து விட்டது. இதுதொடர்பான வழக்கு போபால் கோர்ட்டில் கடந்த 26 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்தது. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும் கிடைக்காமல் பெரும் அவலமாக இருந்துவந்தது. சுமார் 26 ஆண்டுகளுக்குப்பின்னால் இப்போது இந்த வழக்கில் தீர்ப்பளித்திருக்கும் நீதிமன்றம்

1. விஜய் கோகலே, யூனியன் கார்பைடு நிறுவன நிர்வாக இயக்குநர்.

2. கிஷோர் காம்தார், யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் துணைத் தலைவர்.

3. ஜே.முகுந்த், முன்னாள் ஒர்க்ஸ் மேனேஜர், யூனியன் கார்பைடு.

4. ராய் செளத்ரி, உதவி ஒர்க்ஸ் மேனேஜர், யூனியன் கார்பைடு (ஏற்கனவே இறந்து விட்டார்).

5. எஸ்.பி.செளத்ரி, முன்னாள் உற்பத்தி மேனேஜர், யூனியன் கார்பைடு.

6. கே.வி.ஷெட்டி, முன்னாள் உற்பத்திக் கலன் கண்காணிப்பாளர், யூனியன் கார்பைடு.

7. ஷகீல் குரேஷி, முன்னாள் உற்பத்தி உதவியாளர், யூனியன் கார்பைடு.
ஆகியோரைக் குற்றவாளிகளாக அறிவுத்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விபரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சுமார் இரண்டுவருட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிற நிலையில் யூனியன் கார்பைட் என்னும் நிறுவனத்தின் உறுப்பினரான அமெரிக்க முதலாளி ஆண்டர்சனை குற்றவாளியாகக்கூட நீதிமன்றம் அறிவிக்கவில்லை. பாதிக்கபப்ட்ட மக்களுக்கு நிவாரணம் கூட வழங்கப்படவில்லை.இந்திய ஜனநாயகம் ஏழைகளை எப்படி நடத்துகிறது என்பதர்கு போபால் வழக்கு ஒரு உதாரணம்.

Exit mobile version