போக்லண்ட் இராணுவம் குவிப்பு: இங்கிலாந்து மீது ஐ.நா.வில் புகார் செய்வோம்
இனியொரு...
ஆர்ஜெண்டினா அருகே இங்கிலாந்துக்கு சொந்தமான போக்லண்ட் தீவு உள்ளது. இந்த தீவுக்கு ஆர்ஜெண்டினாவும் உரிமை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இங்கிலாந்து போக்லண்ட் பகுதிக்கு போர் கப்பல்களை அனுப்பி வருகிறது. இது தொடர்பாக ஆர்ஜெண்டினா அதிபர் கிறிஸ்டினா கூறியதாவது:- இங்கிலாந்து தெற்கு அட்லாண்டிக் பகுதியில் இராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சர்வதேச சமூ கத்தில் போர் பதட்டத்தை உருவாக்குகிறது. இது சம்பந்தமாக ஐ.நா. பாதுகாப்பு சபையிலும், பொது சபையிலும் புகார் செய்வோம் இவ்வாறு அவர் கூறினார்.