Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொஸ்னியாவில் தேசிய இனமுரண்பாடுகள் அழிந்து வர்க்கப் போராட்டம் ஆரம்பமானது

துல்ஸா ஆர்ப்பாட்டம்
துல்ஸா ஆர்ப்பாட்டம்

பொஸ்னியாவில்(BiH) 1990 களில் தேசியவாதமும் இனமோதல்களும் உச்சமடைந்திருந்தது. மனித உரிமை என்ற தலையங்கத்தில் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தலையிட்டு அந்த நாட்டை ஒட்டச் சுரண்டின. பொஸ்னியாவின் பணக்காரர்கள் தேசியத்தின் பெயரால் மக்களைச் சுரண்டினர். ஐ.எம்.எப் ஐயும் உலக வங்கியையும் அழைத்துவந்து நாட்டை அடகுவைத்தனர். இரண்டு தன்னாட்சி கொண்ட பிரதேசங்களை இணைத்து உருவாக்கப்பட்ட பொஸ்னியா வழமையான முதலாளித்துவ அரசுகளைப் போன்று ஊழல், எதேச்சதிகாரம் போன்ற பண்புகளைக் கொண்டிருந்தது. இன முரண்பாடு ஆட்சியாளர்களதும் பணக்காரர்களதும் சட்டைப்பைகளை நிரப்பிக்கொள்ள உதவியது. எஞ்சியவற்றை ஐ.எம்.எப் உம் உலகவங்கியும் அன்னிய நாடுகளும் சுருட்டிக்கொண்டன. மக்கள் தொகையில் 27 வீதமானவர்கள் வேலையற்றவர்களாகினர்.
துஸ்லா நகரின் இரண்டு தொழிற்சாலைகல் 2000 ஆம் ஆண்டு தனியர் மயப்படுத்தப்பட்டது. இன்றைய பொருளாதார நெருக்கடியால் தொழிற்சாலைகளை மூடிவிடுவதாக நிர்வாகிகள் அறிவித்தனர். இந்த இரண்டு தொழிற்சாலைகளும் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்ததும் 04.02.2014 அன்று அங்கு போராட்டம் ஆரம்பித்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட ஆரம்பிததும் வேறு நகரங்களுக்கும் போராட்டம் பரவியது.
ஏழைகளும், வேலையற்றோரும் போராட்டங்களில் இணைந்துகொண்டனர். மாணவர்கள் தெருக்களில் இறங்கினர். பெப்ரவரி 7ம் திகதி ஆளும் கட்சி அலுவலகமும், அரசிற்குச் சொந்தமான கட்டமும் எரிக்கப்பட்டன. இதுவரை 150 இற்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டங்கள் தொடரும் நிலை காணப்படுவதாக பொஸ்னிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தங்களுக்கு இடையே மோதிக்கொண்ட தேசிய இனங்கள் அனைத்தும் வேறுபாடுகளை மறந்து போராட்டத்தில் ஒன்றிணைந்தன. சில வாரங்களின் முன்னர் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத ஒருங்கிணைந்த போராட்டம் அதிகாரவர்க்கத்தையும் தேசிய வியாபாரிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அயல் நாடான குருவேசியாவிலும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவான சுலோகங்களுடன் மக்கள் தெருவில் இறங்கினர்.
இதுவரை ஏகாதிபத்தியங்களின் நிதி அதிகாரத்தால் ஆட்கொள்ளப்பட்டிருந்த இந்த நாடுகளில் முதல்தடவையாக வர்க்கப் போராட்டத்திற்கான ஆரம்பத்தைக் காணமுடிகிறது. தொழிற்சங்கங்கள் தமது பலத்தை வலுப்படுத்திக்கொள்வதும் தொழிலாள வர்க்கக் கட்சி தன்னை முன்னணிப்படையாக முன்னிறுத்திக்கொள்வதும் போராட்டத்தின் வெற்றிக்கு அடிப்படையாகும்.

Exit mobile version