இந்த ஆர்பாட்டத்தில் அரசியல் , இன , மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் , சமூக நிறுவனங்களும் , மனித உரிமை அமைப்புகளும் கலந்துகொள்ளவேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் ,கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோகணேசன் இந்நாட்டிலே இன்று இத்தகைய காட்டுமிராண்டி கலாசாரம் வேகமாக
இந்த சம்பவத்தின் காரணமாக கைது இடம்பெற்று இருந்தாலும் ,இத்தகைய அராஜகபோக்கை நாம் கண்டிக்காமல் அமைதியாக இருப்போமானால் இது தொடர்கதையாக மாறிவிடும்.
ஏற்கனவே அங்குலான பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸ் அராஜகத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நாம் மறக்கமுடியாது. எனவே அனைத்து தரப்பினரும் தங்களது வழமையான கடமைகளை ஒத்திவைத்துவிட்டு எதிர்வரும் புதன்கிழமை 4ம் திகதி பகல் 12.00மணிக்கு கொழும்புஇ கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றுக்கூடி எமது சாத்வீக எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்.
மேல்மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தலைமையிலான முஸ்லிம் உரிமைகள் இயக்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் தமது ஒத்துழைப்பை இந்த அராஜகத்திற்கு எதிரான நமது ஆர்ப்பாட்டத்திற்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் , மாகாணசபை உறுப்;பினருமான எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.