Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொலிவியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட USAID : புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்

usaidUSAID என்ற அமரிக்க அரசால் உருவாக்கப்பட்ட தன்னார்வ நிறுவனத்தை பொலிவியா அரசு தனது நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமரிக்க முகவர் அமைப்பு( United States Agency for International Development (USAID)) என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் பொலிவிய நாட்டின் உறுதித் தன்மையைச் சீர்குலைப்பதாக அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. அமரிக்க அரசின் செயலர் ஜோன் கெரி தனது மேதின உரையில் லத்தீன் அமரிக்க நாடுகள் அமரிக்காவின் கொல்லைப்புற நாடுகள் என்று விழித்திருந்தமை பல லத்தீன் அமரிக்க நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஜோன் கெரி உரையின் பின்னான இந்த வெளியேற்றம் மேலும் பல அரசியல் பரிணாமங்கள் உடையதாக உள்ளது.
உலக நாடுகள் பலவற்றில் உளவு நிறுவனம் போன்றும், நாட்டின் உறுதித்தன்மையைச் சீர்குலைப்பதிலும் பெரும் பங்காற்றிய USAID ரஷ்யாவிலிருந்தும் வெளியேற்றப்பட்டது. 1992 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவிலும் 1964 ஆம் ஆண்டிலிருந்து பொலிவியாவிலும் செயற்பட்டுவருகிறது.
1960 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் செயற்பாட்டுவரும் இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் கடந்த பத்தாண்டுகளில் பன்மடங்காக அதிகரித்துள்ளது. பல்வேறு திட்டங்களைக் கிராமங்கள் வரை வகுத்துச் செயற்படும் இந்த அமைப்பு பல சிக்கல்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமாகின்றது. புலம் பெயர் நாடுகளிலிருந்து செயற்படும் சிறீலங்கா ஜனநாயக முன்னணி (sri lanka democracy forum(SLDF) ) என்ற தன்னார்வ அமைப்புடனும் இணைந்து திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. SLDF இன் பொருலாளர் டக்ளஸ் தேவானந்தாவின் சட்ட ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version