அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தின் ஒரு பகுதியான ஃபேர்பாக்சில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்தக் கும்பல்கள் பள்ளிக்கூட வளாகங்கள், சமூக ஊடகக்குழுக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து நிறுத்தங்கள் போன்றவற்றில் 16, 17 மற்றும் 18 வயது மாணவிகளைக் குறிவைத்து இயங்குகின்றன என்று காவல்துறை விசாரித்ததில் தெரிய வந்துள்ளது. ரவுடிகளின் துணையோடு தங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாத பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பாலியல் தொழிலில் இந்த மாணவிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருமுறை ஒப்புக்கொண்டபிறகு, அதில் ஈடுபட மறுத்தவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு இதில் ஈடுபட்ட மாணவிகளில் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியான தேவைகளுக்காகவே சம்மதித்திருக்கிறார்கள் என்று காவல்துறை கூறுகிறது. அவர்கள் கொடுத்துள்ள வாக்கு மூலங்களும் அதை உறுதிப்படுத்துகிறது.
இந்த பாலியல் மோசடிக் கும்பலின் தலைவர் என்று கருதப்படும் ஜஸ்டின் ஸ்ட்ரோம் கைது செய்யப்பட்டிருக்கிறார். மாணவிகளில் ஒருவர் சம்மதித்தபிறகு, தன்னை விட்டுவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். கத்தி முனையில் இந்த ஜஸ்டின் ஸ்ட்ரோம் அப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களைக் கடத்திக் கொண்டு வந்து தனது மோசடித் தொழிலைச் செய்து வந்த ஜஸ்டின் ஸ்ட்ரோமுக்கு பொருளாதார நெருக்கடி உதவியிருக்கிறது.