Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொருளாதாரச் சரிவு : பணம் பாதுகாப்பாக உள்ளது

The British Virgin Islands, the world's leading offshore haven used by an array of government officials and rich families to hide their wealth.
The British Virgin Islands, the world’s leading offshore haven used by an array of government officials and rich families to hide their wealth.

பிரித்தானியாவில் பொருளாதாரம் மூழ்க்கிக்கொண்டிருக்கிறது. சிதைந்து சிதறும் பொருளாதாரம் பெரும் அழிவுகளையும் சமூகச் சீர்குலைவையும் ஏற்படுத்தலாம் என எதிர்வுகூறப்படுகிறது. டேவிட் கமரன் தலைமையிலான பழமைவாதக் கட்சி ‘சிக்கன நடவடிக்கை’ என்ற பெயரில் மக்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றியுள்ளது. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றன மக்களின் வாழ்க்கைத் தரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் பிரித்தானியாவின் வேர்ஜீன் தீவுகளில் மில்லியெனேர்கள் பெரும் பணத்தைப் பதுக்கிய தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிரித்தானியச் சட்டத்திற்கு உட்படாத கரைகடந்த (offshore) நிதி நிறுவனங்களில் பெருந்தொகையான பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது. மிலியன் கணக்கிலான உள்ளக தகவல்கள் வெளியே கசிந்ததைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பண முதலைகளின் இரகசிய வங்கிக் கணக்குகள் வெளியாகியுள்ளன.

கரைகடந்த கணக்குகளில் பணப் பதுக்கலில் ஈடுபடும் திருடர்களின் பிரதான பிரதேசமாக வேர்ஜீன் தீவுகள் காணப்படுகின்றன. வேர்ஜீன் தீவுகளில் வைப்பிடப்படும் பணத்திற்கு வருமானவரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.
கரேபியன் கடலில் எல்லைப் பகுதிகளில் காணப்படும் பிரித்தானிய வேர்ஜீன் தீவுகள் பிரித்தானிய அரசின் வெளிநாட்டு எல்லையாகக் காணப்படுகிறது.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, கனடா, பிரித்தானியா, தாய்லாந்து போன்ற பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் திருட்டுப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளமை உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் ‘சோசலிச’ ஜனாதிபதியான பிரான்சுவா ஒல்லோந் இன் தேர்தல் பிரச்சாரத்திற்கு பொருளாளராக செயலாற்றிய ஜோன் ஜாக் ஓகியேர் என்பவர் சீன நாட்டின் வியாபாரியான ஸீ ஷூ என்பவருடன் இணைந்து பல மில்லியன்கள் பெறுமதியான வினியோக நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்த நிறுவனத்தின் ஓகியேரின் 25 வீதமான பங்கு வேர்ஜீன் தீவு வங்கிக் கணக்கில் உள்ளது. ரஷ்ய நாட்டின் உதவிப் பிரதமர் ஒக்லா ஷூவலோவா வங்கிக் கணக்கு குறித்த விபரங்களும் வெளியாகியுள்ள்ன. கனேடிய செனட்டரின் கணவர் ரோனி மேர்சன்ட் 8 லட்சம் டொலர்களை கரைகடந்த வங்கியில் வரி அறவிட முடியாமல் வைப்பிட்டுள்ளார்.ஜோர்ஜியாவின் பிரதமர் பெருந்தொகைப் பணத்ததை வைப்பிட்டுள்ளார். இந்தியா உட்பட பல நாடுகளின் அரசியல் வாதிகளும் வியாபாரிகளும் பதுக்கிய பணம் குறித்து இதுவரை வெளியான தகவல்கள் 20 ரில்லியன் டொலர்களகும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக் காலகட்டத்தில் பெரு முதலைகள் பணத்தைப் பதுக்கிவைப்பதற்கான சொர்க்க புரிகள் வேர்ஜின் தீவுகளிலும் மேலும் பல நாடுகளிலும் ஆரம்பமாகிவிட்டன.

உழைக்கும் மக்களின் பணத்தை வங்கிகளைப் பாதுகாப்பதற்காகவும், வரிபணமாகவும் அறவிடும் பல் தேசிய நிறுவனங்களின் பின்னணியில் இயங்கும் அரசுகள் தாம் சார்ந்தவர்களின் பணத்தை பாதுகாக்க வழிகளை உருவாக்கியுள்ளன.

Exit mobile version