Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொன்சேக்காவின் மனுவை விசாரிப்பதைத் தவிர்ப்பதற்காக வெளிநாடு செல்லுமாறு பிரதம நீதிபதிருக்கு அழுத்தம்!

     உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சரத் பொன்சேக்காவின் அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்வதைத் தவிர்ப்பதற்காக வெளிநாடொன்றுக்குச் செல்லுமாறு பிரதம நீதிபதி அசோக சில்வாவிற்கு அரசாங்கத்தின் உயர் பதவி வகிகும் ஒருவர் அழுத்தம் கொடுத்துள்ளதாக மிகவும் நம்பத்தகுந்தத் தரப்புத் தகவல்கள் மூலம் எமது இணையத்தளத்திற்கு தெரியவந்துள்ளது.
பிரதம  நீதிபதினால் உயர் நீதிமன்றம் குறித்து மக்கள் நம்பிக்கையற்றுப் போகதிருக்க சரத் பொன்சேக்காவை பிணையில் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கக் கூடும் என்பதனாலேயே இவ்வாறு குறித்த நபர் பிரதம நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
 
 
 
  பிரதம  நீதிபதிவிடவும் நீதியரசர் ~pராணி பண்டாரநாயக்க அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படும் நிலை காணப்படுவதால்  நீதிபதி சிராணி தலைமையில்  நீதிபதி  குழு பொன்சேக்காவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே குறித்த அரச உயர் அதிகாரி இவ்வாறு பிரதம நீதியரசரை  நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

இதன் பின்னணி குறித்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஊடாக நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் நீதியரசர்  சிராணி பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் கொழும்பு சட்டபீடத்தின் கீழ்படித்த மாணவி என்பதனால் ஆகும்.

அந்த நீதியரசர்கள் குழுவிலிருந்த  சிராண திலகவர்தன குறித்து கடும் அதிருப்தியில் இருக்கும் அரசாங்கத்தின் உயர் மட்ட நபர், அவரை நீதியரசர் குழுவிலிருந்து நீக்குவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்துள்ளார். எனினும், இந்த செயற்பாட்டினால் நீதித்துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அநாவசியமான பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் இறுதிச் சந்தர்ப்பத்தில் திலகவர்தனவை குறித்த நீதியரசர் குழுவில் உள்ளடக்கியுள்ளார்.

மனித உரிமைகள் வழக்குகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக இலங்கை அரசியல்சாசனத்தின் 126வது  சரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மனித உரிமை வழக்குகளில் நபர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக வழக்கு விசாரணைகளை இரண்டு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள போதிலும்  சிராணி பண்டாரநாயக்க அரசியலமைப்பை மீறும் வகையில் இரண்டு மாத காலத்திற்கும் மேலாக வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

அரசாங்கத்தின் உயர் மட்ட நபரின் அழுத்தங்களுக்கு அடிபணிந்தே சரத் பொன்சேக்காவிற்கு பிணை வழங்குவது நிராகரிக்கப்பட்டதாகவும் எமக்குத் தகவல் வழங்கிய தரப்புகள் மேலும் தெரிவித்தன.

Exit mobile version