இலங்கையில் பாசிச பயங்கரவாத இயக்கமான பொது பல சேனா தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்த ஆரம்பித்துள்ளது. ஆயுதப் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. அரச பயங்கரவாதம் உப கிரிமினல் குழுக்கள் ஊடாகவும் அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. கோத்தாபய ராஜபக்ச என்ற தெற்காசியாவின் கொடிய இராணுவச் சர்வாதிகாரியின் வழி நடத்தலில் பொது பல சேனா தனது ஆயுத நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு எதிரான தற்காப்புப் போராட்டங்களை மக்களை அணிதிரட்டுவதன் ஊடாக முஸ்லிம்கள் மேற்கொள்ளத் தவறினால் அழிவுகள் தவிர்க்கமுடியதவை ஆகிவிடும்.
பேரினவாத இயக்கமான பொதுபலசேனா இயக்கத்துக்கு இலங்கையின் ஒவ்வொரு பிரதேசத்திலும் உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29.06.2014), கொழும்பு – 07 இல் உள்ள பொது நூலகத்தில் பகிரங்கமாக நடைபெறவிருக்கின்றது. உறுப்பினர்களுக்கு விஷேட ஆயுதப் பயிற்சியும் வழங்கவிருக்கிறார்கள்.