Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொது பல சேனாவின் குண்டர் படை பொலீசார் முன்னிலையில் தாக்குதல் (காணொளி)

BBSமுஸ்லீம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சிலகுறித்து உரையாடும் நோக்குடன் ஜாதிக பல சேனா என்ற அமைப்பு இன்று புதன்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. நேற்று புதன் காலை இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வேளையில் அங்கு புகுந்த கோத்தாபய ராஜபக்சவின் பௌத்த நாசி அமைப்பான பொது பல சேனாவின் தலைவர் ஞான தாச தேரர் என்ற பௌத்த பிக்குவும் குண்டர் படைகளும் அங்கிருந்த அனைவரையும் விரட்டியடித்தனர். அங்கு பாதுகாப்புச் சேவையில் ஈடுபட்டிருந்த 40 போலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்க அவர்களின் முன்னிலையில் இத் தாக்குதல் நடைபெற்றது. பொது பலசேனாவின் பெரும்பாலான வன்முறைச் சம்பவங்கள் போலிஸ் பாதுகாப்பிலேயே நடைபெறுகிறது.

‘முஸ்லிம்களுக்கு பிரச்சினை இருக்குமானால் ஜெனீவா போங்கள். உலமா சபை உள்ளது. அமைச்சர்கள் இருக்கின்றார்கள் அவர்களிடம் போங்கள் தக்வீத் ஜமாத்தே உள்ளது போங்கள்.முஸ்லிம்கள் பலாத்காரமாக குடியேற்றப்படுகிறார்கள் வில்பத்து அழிக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் மெளனமாக உள்ளனர். ஆனால் நாம் மௌனமாக இருக்க மாட்டோம்’ என ஆவேசமாக பேசியதோடு அங்கிருந்த மௌலவிமாரை வெளியேற்றினர். அதன் பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டில் வந்திருந்த பௌத்த குருமாரிடம் பௌத்த மதம் தொடர்பாக கேள்விகளை கேட்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.


Exit mobile version