தாக்கப்பட்ட விஜித தேரர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விஜித தேரர், வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய உடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போலி கடத்தல் நாடகமொன்றை அரங்கேற்றியமைக்காக வட்டரக்க விஜித தேரருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தவிர வட்டரக்க தேரர் தமக்குத் தாமே காயங்களை ஏற்படுத்திக்கொண்டு மருத்துவமனைக்கு வந்ததாகப் போலிஸ் பலவந்தப்படுத்தி வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அரச பாசிஸ்ட்டுக்கள் பொது பல சேனாவுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு ஒன்றை நிறைவேற்றத் தயாராகி வருகிறது. இதனை எதிர்க்க முனையும் அனைவரையும் அழிக்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.