தவிர ஆதித்யா பிர்லா குழுமம், டாட்ட குழுமம், ரிலையன்ஸ் ஆகிய முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.
பிரித்தானியாவிலிருந்து பல வர்த்தக நிறுவனங்கள் பிரித்தானியப் பிரதமருடன் இலங்கையில் முகாமிட்டுள்ளன. வர்த்தக நிறுவனப் பிரதிநிதிகளின் பெயர்கள் இதுவரை வெளியிடப்படாமை பலத்த சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ராஜபக்ச அரசின் போர்க்குற்றங்களைக் காரணமாக முன்வைத்து அழுத்தங்களை வழங்கும் மேற்கு மற்றும் இந்திய அரசுகள் அவற்றினூடாக தமது வியாபார நிறுவனங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொள்கின்றன. தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முழு இலங்கையையும் அதன் மக்களையும் பல்தேசிய மாபியாக் கொள்ளைக் காரர்களுக்கு லஞ்சமாக வழங்குகிறது ராஜபக்ச அரசு.
கசினோ சூதாட்டத்திலிருந்து இல்மனட் கனிமங்கள் ஈறாக இலங்கையை அழுக்காக்கும் ஆலைகள் வரை பல்தேசிய நிறுவங்கள் சூறையாட வசதி செய்து கொடுக்கப்படும். இதன் பிரதிபலனாக ராஜபக்ச போர்க்குற்றங்களிலிருந்து விடுதலைசெய்யப்படுவார்.
நிலைமை இவ்வாறிருக்க இலங்கைக்குச் சென்று போர்க்குற்றம் குறித்துப் பேசுகிறேன் என்று பிரித்தனியப் பிரதமரும் இலங்கைக்கு செல்லாமல் தனது வியாபாரிகளை அனுப்புவேன் என்று இந்தியப் பிரதமரும் கூறுவது வக்கிரமானது. இதனை கண்டும் காணாதுபோல பல்தேசிய நிறுவனங்களின் அடிமைகள் போன்று தமிழ் இனவாதத் தலைமைகள் செயற்படுகின்றன.