Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் கலந்துகொள்வார் : இறுதி முடிவு

Manmohan_Singhஇலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஈழப் போராட்டம் ஆயுதம் தாங்கிய யுத்தமாக வளர்ச்சியடைந்த காலத்திற்கு முன்பிருந்தே இந்திய அதிகார வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கங்களும் பிரதான கட்சிகளான பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் போன்றனவும் அழிக்கும் இயந்திரங்களாகத் தொழிற்படுகின்றன.
ஒடுக்குமுறையின் குறியீடான பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளக் கூடாது என்று குரல்கள் எழுந்தன. இலங்கையில் இனச்சுத்திகரிப்பும் நில ஆக்கிரமிப்பும் தொடரும் அதே வேளை மன்மோகன் கலந்து கொள்வாரா இல்லையா என்பதே பிரதான விவாதப் பொருளாக, தமிழ் வியாபார ஊடகங்களின் பிரதான பேசுபொருளாக அமைந்திருந்தது.
பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் புதன்கிழமை மாலை கூடிய அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதில் எந்தவித ஆட்சேபமும் இல்லை’ என்று காங்கிரஸ் உயர்நிலைக் குழுவில் முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Exit mobile version